Friday, February 24, 2012

நான் வாசித்த புத்தகம்லில் சில.... 1.பொன்னின் செல்வன்


நான் எட்டாம் வகுப்பு படித்த பொது நான் வாசித்த புத்தகம்.. நினைவு அறிய நாளில் நான் படித்த இந்த புத்தகம் இன்னும் எனக்கு நினைவு உண்டு. நான் வாங்கிய முதல் அலைபேசியில் Profile name அக வந்தியதேவன் (கதையின் நாயகன் ) என்று வைத்து மகிழ்தேன்.

எனக்கு வரலாறு மேல் ஒரு ஈடுபாடயும், காதல்யும் பின்னலில் "King of History" என்ற பட்டத்தையும் , பத்தாதம் வகுப்பு பொது தேர்வில் வரலாறு பாடத்தில் 98 மதிப்பெண்களும் எனக்கு வாங்கி தந்தது  அமரர் கல்கி அவர்கள் என்றால் மிகையாகது.

கதை எழுத புனை பெயர் தேட முற்பட்ட பொது எனக்கு தோன்றிய முதல் பெயர் ராஜா ராஜா சோழனின் இயற்பெயர் "அருள் மொழி வர்மன்" ,
நுலாகம் செல்ல  முற்பட்ட பொது எல்லாம் வெளியே இருக்கும் புத்தகத்தில் கையெழுத்து இடும் பொது "அருள் மொழி" என்று எழுத்து மகிழ்து இருக்கேன்.

10 மாம் வகுப்பில் விட்ட அந்த வாசிப்பு பழக்கம் மீண்டும் இப்போது தான் ஆரம்பித்து இருகிறது என்று கூறுவதில் மகிழ்ச்சி.

பொன்னியின் செல்வன் அமரர் கல்கி (1899-1954) எழுதிய புகழ் பெற்ற தமிழ் வரலாற்றூப் புதினமாகும். 1950 - 1955 ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது. இப் புதினத்துக்குக் கிடைத்த மக்கள் ஆதரவு காரணமாகத் தொடர்ந்தும் பல்வேறு காலகட்டங்களில் இதே புதினத்தைக் கல்கி இதழ் தொடராக வெளியிட்டது. தவிர தனி நூலாகவும் வெளியிடப்பட்டுப் பல பதிப்புக்களைக் கண்டுள்ளது. கி.பி. 1000 ஆம் ஆண்டு
வாக்கில் இருந்த சோழப் பேரரசை அடிப்படையாகக் கொண்டு இந்த வரலாற்றுப் புதினம் எழுதப்பட்டிருக்கிறது.

இப் புதினம், புது வெள்ளம், சுழல்காற்று, கொலைவாள், மணிமகுடம், தியாக சிகரம் என 5 பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 300க்கு மேற்பட்ட அத்தியாயங்களைக் கொண்டது.



இந்த புத்தகத்தின் இன்றைய விலை 240. பிறந்த நாள் பரிசாக இனி என் நண்பர்களுக்கு இந்த புத்தகத்தை வழங்க நான் முடிவு செய்து இருக்கிறேன்.

சுருங்க சொல்ல போனனல் சோழ இளவரசன் அருள் மொழி வர்மன் எப்படி ராஜா ராஜா சோழன் அக மாறிய கதை இந்த கதை .

வரலாறு bore இன்று சொல்லுபவர்கள் இந்த புத்தகத்தை வசித்து பாருங்கள் வரலாறு மாதிரி எதுவும்  சுவாரஸ்யமான பாடம் எதுவும் இல்லை என்று சொல்லுவீர்கள்.

தமிழ் மற்றும் தமிழனின் வரலாறு புரியும். ஹீரோசிம் என்றால் என்ன என்பதை தமிழ் சினிமா வை விட நன்றாக புரியவைப்பார் அமரர் கல்கி.

1950களில் பொன்னியின் செல்வன் எயல்லாத வீடே தமிழகத்தில் கிடையாது என்பது உண்மை.
பொன்னியின் செல்வன் பற்றி உங்கள் தாத்தா அல்லது அப்பா விடம் கேட்டு பாருங்கள்
உங்களுக்கும் அதன் அருமை தெரியும். ஆனால் இந்த அருமையான புத்தகத்தை இந்த தலைமுறைக்கு தராமல் ஆங்கில மோகத்தில் அதனை மறக்கடித்து விட்டோம். :-(

சுந்தர சோழன்னுக்கு 3 குழத்தைகள் முத்தவன்  ஆதித்த சோழன், இரண்டாவது மகள் குந்தவை தேவி,முன்றாவது மகன் அருள் மொழி வர்மன்.

ஒரு முறை காவேரி நதிலில் மன்னன் சுந்தர சோழன் தன் பிள்ளை களுடன் படகில் செல்லும் பொது இளையவன் அருள் மொழி யை காணவில்லை. எல்லாரும் படகில் தேடும் பொது மன்னன் சுந்தர சோழன், அருள் மொழி நதிலில் (தண்ணிளில்) இருபதத்தை பார்த்தார். உடனே தண்ணீர் குதித்து நீந்தி அருள் மொழி நோக்கி செல்லும் பொது தண்ணீர் இருந்து ஒரு கை குழந்தையை தூக்கி தந்தது. மன்னன் குழந்தையை வாங்கி படகுக்கு வந்து திரும்பி பார்க்கும் பொது அந்த கை மறைத்து இருந்தது.

சரி யார் அருள் மொழி காப்பற்றி இருந்தாலும் அரசவைக்கு வந்து பரிசு பொருள் கேட்டு பெறுவார்கள் என்று அரசனும் அரசியும் எதிர் பார்த்தார்கள் ஆனால் யாரும் வரவில்லை.

காவேரி க்கு பொன்னி நதி என்று மற்று ஒரு பெயர் உண்டு. அந்த பொன்னி நதி தான் அருள் மொழி யை காப்பற்றியது என்று அக்கா குத்தவை சொன்ன பொது எல்லாரும் ஏற்று கொண்டார்கள்.

அந்த பொன்னி நதியே காப்பற்றி குடுத்தால் அருள் மொழி வர்மன் க்கு , பிக்காலத்தில் தஞ்சை லில் பெரிய கோவில் கட்டி ராஜா ராஜா சோழன் என்று ஆட்சி புரிந்து தமிழன் புகழை எட்டு திக்கும் பரவ செய்தவனுக்கு பொன்னியின் செல்வன் என்று பெயர் வைத்தார்கள்.

Ponniyin selvan is also translated into english. All five parts can be bought
through online in english. In tamil the pdf version of the book is free for all
and you can mail me to get the pdf version of all 5 parts.

Happy Reading...